மதுரையின் முதல் "துரிங் வானவில் திருவிழா "


அன்பினத்தவற்கு,

கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடுக்க வல்ல ஒரு அதிமேதாவியை நம் அறியாமை கொன்று விட்டது.

தத்துவவியலின் விடிவெள்ளி,கணினி அறிவியலின் தந்தை, தர்க்கத்தின் அதிபதி, மறையீட்டியலின் அரசர், செயற்கை நுண்ணறிவின் கடவுள், உயிரின அமைப்பியலின் முன்னோடி என்று பல்துறை அறிவை உள்ளடக்கிய ஒரு அரும் பெரும் மேதாவி.!-அவர் தான் ஆலன் துரிங்.
ஒரு மனிதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் சாதிக்க இயலாத விஷயங்களை, நாற்பத்து ஓரு வயதிற்குள் எந்த வாய்ப்புமில்லாமல் சாதித்து காட்டியவர் துரிங். பாலின பாகுபாடு என்ற ஒரே காரணத்தால் அவரின் தனி சுதந்திரம் பறிக்கப்பட்டு மிக ஆழ்ந்த துயரங்களில் வாழ்ந்த இவரின் நூற்றாண்டு வருடமிது.

அவரை கொன்ற அறியாமை நம் சமூகத்திலிருந்து விலகி விட்டதா?
இல்லை.!

அவ்வறியாமையை போக்கும் விதமாக ஸ்ருஷ்டி மதுரை என்ற மாணாக்கர் அமைப்பு மதுரையின் முதல் "துரிங் வானவில் திருவிழா " மற்றும் கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகபடுதுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு ஆளுமை வளர்ச்சி சார்ந்து புது விழுமியத்தை புகட்டும் நிகழ்சிகள் கீழ்வருமாறு:-

1. பிறப்பிற்கும் இறப்பிற்கும் முன்னால்..
டார்வின் மற்றும் சமூகவியல் வல்லுனர்களின் தடம் சார்ந்து
சங்ககாலதிற்கும் முன்னால்...
சரித்திர காலத்திற்கும் முன்னால்..
மனித நாகரீகம் தோன்றிய காலம் முதல்...
மனிதனே தோன்றிய காலம் வரை...
பின்னால் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு அமர்வு.

அமர்வை நடத்துபவர்:-

நிர்மல் ராஜா, உயிரியல் முதுகலை பட்டதில் தங்க பதக்கம் வென்றவர், பறவையியல் ஆய்வாளர், புதைபடிமம் சேகரிப்பவர், தொல்லுயிரியலாளர்.
2. நம்மை தேடி ...
ஆண் பெண்ணை தவிர்த்து இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
இந்த பாலின பாகுபாடுதான் துரிங் போன்ற பல வல்லுனர்களை கொன்றது..
அரிஸ்டாட்டில் தொடங்கி ஹார்வே மில்க் வரை நம் முன்தீர்மானிக்கபட்ட தவறான கருத்துக்கள் பற்றி ஒரு அலசல்...

அமர்வை நடத்துபவர்கள்:-

ஜான் மார்ஷல்,இயக்குனர், ஸ்ருஷ்டி குழுமம், பங்களிப்பாளர், சர்வதேச கணித மற்றும் கணித பயன்பாடு இதழ், உயிரிதகவலியல் மாணவர்,கோவை வேளாண் பல்கலைகழகம்.
கோபி ஷங்கர் (சர்வ புண்யன்),நிறுவனர்,ஸ்ருஷ்டி குழுமம்,அரசியல் அறிவியல் , டுக்காசின் பல்கலைகழகம், பென்சில்வேனியா,ஐரோப்பிய யோகா பயிற்றுனர்-அஷ்டாங்க இதழ், மதம்-தத்துவம்-மற்றும் சமூகவியல் துறை மாணவர், அமெரிக்கன் கல்லூரி,மதுரை.


3.துரிங்-இன் வாழ்வும் பங்களிப்பும் வானவில் திருவிழாவும் ...

அலன் துரிங் உலகத்திற்கு விட்டு சென்ற விலை மதிப்பற்ற சொத்துகள் முதல்
பல ஆராய்ச்சி வல்லுனர்களுக்கும் புரியாத புதிராக திகழும் விஷயங்கள் என்று
கணினி தொடங்கி கமண்டலம் வரை..
துரிங்-கை கண் முன் நிறுத்தும் நிகழ்பட மற்றும் கலந்தாய்வு.

அமர்வை நடத்துபவர்:

பங்கஜ் குமார்.இந்திய கணினி சமூகத்தின் ஆராய்ச்சி நிதி பெற்றவர். அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் சுற்று சூழலுக்குரிய கேரளா மாநில குழுவின் ஆராய்ச்சி நிதி பெற்றவர்.கணினி அறினர்.

4. கலைநிகழ்ச்சிகள்:
அருண் ஆடம் மற்றும் குழுவினர்.

பிரிட்டன் தான் துரிங்-இற்கு செய்த கொடுமைகளுக்கு பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்டது. துரிங்-இன் மறைவு நமக்கு பெரும் இழப்பு. அவரின் இழப்பையும் இருப்பாக மாற்றுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

ஜூலை ,2 to 22, 2012 Mahatma Schools, PSNA engg college for information plz conact: 9092282369




உலகம் முழுவதும் கொண்டாடப்படும் துரிங்-இன் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நம் மதுரையிலும் சிறப்பாக நிகழ வேண்டும் என்பதே இந்த மாணாக்க நல் உள்ளங்களின் விருப்பம்.

இப்படிக்கு,
மாணாக்கர்களின் சேவையில்,
ஸ்ருஷ்டி மாணாக்கர் குழுமம்,
மதுரை.


1 comment: